நிர்மலாதேவி, எஸ்.வி சேகர் விவகாரம் குறித்து ரஜினி

நிர்மலாதேவி, எஸ்.வி சேகர் விவகாரம் குறித்து ரஜினி

நேற்றிரவு அமெரிக்கா செல்வதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. அதே நேரத்தில் காவலர்களும் சட்டம் கையில் இருக்கு என்று வரம்பு மீறக்கூடாது. ஆடிட்டர் குருமூர்த்தி என்னுடைய 25 வருட நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்பது வழக்கம்’

நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை. தேதி முடிவானதும் கண்டிப்பாக அறிவிப்பை வெளியிடுவேன். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்மலாதேவி உள்பட அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.

மேலும் பத்திரிகையாளர்களை பற்றி இழிவாக பதிவு செய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அந்த பதிவை அவர் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் அது தவறுதான்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்

Leave a Reply