லிங்கா படத்தில் நடித்த ரஜினிக்கு ரூ.60 கோடி சம்பளமா?

lingaaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த எந்திரன் படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இதேபோல் தற்போது லிங்கா படத்திற்காக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் இருந்து அவர் ரூ.60 கோடி சம்பளம் வாங்கியதாக கோலிவுட்டில் தற்போது வதந்திகள் பரவிவருகின்றது. இவை இரண்டுமே அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் இந்த செய்தி காட்டுத்தீ போல  பரவுகிறது.

ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக மிக அதிகம் சம்பளம் வாங்குபவர் ரஜினிகாந்த் என்ற நிலையில் உண்மையில் அவர் லிங்காவுக்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நாளை சென்னை சத்யம் தியேட்டரில் லிங்கா திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Leave a Reply