200 பேர்களை தீவிபத்தில் இருந்து காப்பற்றிய ரஜினி

200 பேர்களை தீவிபத்தில் இருந்து காப்பற்றிய ரஜினி
kabali
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக தற்போது மலேசியாவுக்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். இந்நிலையில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த், சுமார் 200 பேர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கபாலி’ படத்தின் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக் காட்சியில் பற்றி எரியும் தீயில் சிக்கித் தவிக்கும் மக்களை ரஜினி காப்பாற்றுவதுபோல் ஒரு காட்சி உள்ளதாகவும், இந்த சண்டைக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி மிகவும் அற்புதமாக வந்துள்ளதாகவும் படத்தில் இந்த காட்சிகள் பிளாஷ்பேக்கில் வரும் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்

English Summary: Rajinikanth save 200 stunt actors during Kabali shooting

Leave a Reply