என்னால்தான் ஆர்.எம்.வீரப்பனுக்கு அமைச்சர் பதவி காலியானது. ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு
[carousel ids=”71460,71461,71462,71463,71464″] பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா நேற்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்றது. ஆர்.எம்.வீரப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த விழாவில் நேற்று ரஜினியும் கலந்து கொண்டார்.
இந்தவிழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: ”ஆர்.எம்.வீரப்பன் தயாரிச்ச பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்துகிட்டேன். அப்போ அவர் அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்.எம்.வீரப்பனுக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணிணேன். வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சுக்கிட்டே, ‘வருத்தப்படாதீங்க, இது காலத்தின் கட்டாயம்’னு சொன்னார்.
ஆர்.எம்.வீரப்பன் ஒரு முறை கூட மருத்துவமனைக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. மருத்துவமனைக்கு போன வேதனையை அனுபவிச்சவன் நான். தயவு செய்து எல்லோரும் மருத்துவமனைக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கிடுங்க. 50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க.
நான் நடிக்கிற கபாலி படம், பாட்ஷாவை மிஞ்சுமான்னு என்கிட்ட பலர் இப்போ கேட்கிறாங்க. பாட்ஷா திரைப்படத்தோடு கபாலி திரைப்படத்தை ஒப்பிட முடியாது. பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. அந்த படம் ஒரு பெரிய ஹிட்டானதுக்கு ஆர்.எம்.வீ.தான் காரணம். அவருடைய முயற்சி, உழைப்பு தான் காரணம்” என்றார்