தூத்துகுடி போராட்டம் குறித்து ரஜினியின் டுவீட்

தூத்துகுடி போராட்டம் குறித்து ரஜினியின் டுவீட்

சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாப கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் மற்றும் போராட்டம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

“இந்த வெற்றி, போராட்டத்தில் உயிர் இழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்கள் ரத்தம் குடித்த இந்த மாதிரிப் போராட்டங்கள், வருங்காலத்தில் தொடரக்கூடாது என இறைவனை வேண்டுகிறேன்” என ட்விட்டரில் குரல் பதிவு வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர். தமிழக அரசின் இந்த உத்தரவுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதனை வரவேற்றுள்ளார்.

Leave a Reply