ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தோல்வியடைவார். சுப்பிரமணியன் சுவாமி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இருபது வருடங்களுக்கும் மேல் அரசியலுக்கு வரவுள்ளதாக பேசி வரும் நிலையில் நேற்றும் அதேபோல் அரசியலுக்கு ஆண்டவனின் அருள் இருந்தால் வருவேன் என்றும், அப்படி அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன் என்றும் கூறினார்.
ஆனால் அரசியல் தலைவர்கள் ரஜினியின் இந்த பேச்சை சீரியஸாக எடுத்து கொண்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்ம் சுவாமி ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘”ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது. அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்து கருத்து தெரிவித்த சுவாமி, ‘ரஜினி ஒரு கோழை’ என்று கூறியிருந்தார். தற்போது அவர் தமிழரே கிடையாது என்றும், அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார் என்றும் கூறியுள்ளதற்கு ரஜினியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.