ஹேக்கர்களின் கையில் ரஜினியின் டுவிட்டர் பக்கம். அதிர்ச்சி தகவல்

ஹேக்கர்களின் கையில் ரஜினியின் டுவிட்டர் பக்கம். அதிர்ச்சி தகவல்

rajini twitterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலக அளவில் ஹிட்டாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று மாலை அவருடைய டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் சில மணி நேரங்கள் அவருடைய பக்கத்தை இயங்காமல் வைத்திருந்ததாகவும், இதுகுறித்து செளந்தர்யாவின் கவனத்திற்கு வந்த பின்னர் அவர் உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக ஹேக்கர்களிடம் இருந்து ரஜினியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். செளந்தர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது, ‘அப்பாவின் டுவிட்டர் பக்கம் ஒருசில மணி நேரம் மட்டுமே ஹேக்கர்களின் கையில் இருந்தது. தற்போது அந்த பக்கம் மீட்கப்பட்டு இயல்பு நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். ஆனால் ரஜினி ஃபாலோ செய்வது வெறும் 23 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ‘விசாரணை’ படம் குறித்து ரஜினி பதிவு செய்த கருத்துக்கு பின்னர் எந்த பதிவும் அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply