ரஜினியின் தோல்வி படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’, ‘மாப்பிள்ளை’ போன்ற படங்கள் ஏற்கனவே அஜித் மற்றும் தனுஷ் நடிப்பில் ரீமேக் ஆகி மீண்டும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் அவருடைய சில படங்கள் ரீமேக் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1992ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, நடிப்பில் வெளிவந்த ‘பாண்டியன்’ திரைப்படம் தற்போது ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘பாண்டியன்’ படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், கேங்ஸ்டராகவும் நடித்திருப்பார். குஷ்பு அவருக்கு ஜோடியாகவும், ரஜினியின் அக்காவாக ஜெயசுதாவும் நடித்திருப்பார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமாராகத்தான் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசிலர் இதை தோல்விப்படம் என்றும் கூறியதுண்டு
இந்நிலையில் இந்த படத்தை தற்காலத்துக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்ய இயக்குனர் சுராஜ் முடிவு செய்துள்ளார். இவர் தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை, கார்த்தி நடித்த அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் உள்பட பல படங்களை இயக்கியவர். இந்த ரீமேக் படத்தில் ரஜினியின் வேடத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.