ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, பின்னர் அவர்களை அரசியல் லாபத்திற்காக விடுதலை செய்ய துடிக்கும் அரசியல் கட்சிகள், அவருடன் பலியான எங்கள் உறவினர் குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் இருக்கின்றனர். தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்ற துடிக்கும் எந்த அரசியல் தலைவராவது ராஜீவ் காந்தியுடன் மரணம் அடைந்த அப்பாவி தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்களா? என்று அவர்களுடைய உறவினர்கள் ஆவேசமாக கொந்தளிக்கின்றனர்.
1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது அவர் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான லதா கண்ணன், (அவருடைய மகள்) கோகில வாணி, சந்தானி பேகம், சரோஜா தேவி, டேனியல் பீட்டர் ஆகியோர் அந்தச் சம்பவத்தில் பலியாகினர்.
ராஜீவ் கொலைகாரர்களுக்குக் காட்டும் கருணையை தங்களுக்கு யாருமே காட்டவில்லை. அவர்கள் மட்டும்தான் தமிழர்களா? நாங்கள் எல்லம் தமிழர்கள் இல்லையா? என்று ஆவேசமாக கேட்கும் பலியானவர்கள் உறவினர்கள் அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் அவர்களை விடுதலை செய்யக் கூடாது. என்றும் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும்தான் எங்களது வேதனை புரியும் என்றும் பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த அவர்கள், கூடியவிரைவில் ராகுல்காந்தியை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடையே கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள் நம் அரசியல்வாதிகள்.