ராஜீவ் கொலைக்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் எங்கிருந்து வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்காக வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எழுதிய புத்தகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை முன்னாள் நீத்பதி சந்துரு வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்டுவிட்டு பேசிய நீதிபதி சந்துரு, ‘ராஜிவ் காந்தி கொலை வழக்கு சட்டப்படி விசாரணை நடைபெறவில்லை. விசாரணையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகங்களை தூக்கு தண்டனை பெற்ற கைதிகளுக்கு சாதகமாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த விழாவில் பேசிய வழக்கறிஞர் துரைசாமி, ‘ராஜிவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி..எக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து பெறப்பட்டது என்பதை இதுவரை சிபிஐ கண்டுபிடிக்கவே இல்லை. அதை கண்டுபிடித்தால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டிருக்கும். மேலும் ராஜிவ் தமிழக வருகையின் போது தாமதமாக வந்த தகவலை கொலையாளிக்கு யார் கொடுத்தது என்ற தகவலையும் இதுவரை சிபிஐ கண்டுபிடிக்கவில்லை. எனவே இதுபோன்ற சந்தேகங்களை குற்றம் சுமத்தப்பட்ட கைதிகளுக்கு சாதகமாக்க வேண்டும்” என்று கூறினார்.

ராஜிவ் கொலையில் மூன்று பேர்களுக்கு மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற இருக்கும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த புத்தகம் வெளியாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply