விஜய் உள்பட பெரிய நடிகர்களை மறைமுகமாக தாக்கிய ராஜ்கிரண்

விஜய் உள்பட பெரிய நடிகர்களை மறைமுகமாக தாக்கிய ராஜ்கிரண்

இளையதளபதி விஜய் உள்பட பெரிய ஸ்டார்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் தாங்கள் செய்யும் தொழிலில் சம்பாதிப்பதை விட விளம்பரங்களில் அதிகமாக சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண், விளம்பரத்தில் நடிப்பது கேவலமான ஒரு செயல் என்று விஜய் உள்ளிட்ட நடிகர்களை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஏன் விளம்பரப்படங்களில் நடிக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறினார். அவர் கூறியதாவது: ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிப்பது என்பது முழுக்க முழுக்க காசுக்காக நடிப்பதே ஆகும். விளம்பரத்தில் நடிப்பதை நான் கேவலமாக நினைக்கின்றேன்.

ஒரு பொருளை பற்றி ஒன்றுமே தெரியாமல் கோடிக்கணக்கான பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பது என்னை பொறுத்தவரையில் பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

என்னை பொதுமக்கள் நடிகனாக மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவனாக பார்க்கின்றனர். நான் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால், ராஜ்கிரணே சொல்லிவிட்டார், இந்த பொருள் நன்றாகத்தான் இருக்கும் என்று என்னை நம்பி வாங்குவார்கள், நான் விளம்பரப்படுத்தும் பொருள் ஒரு தப்பான பொருளாக இருந்தால் அது, பொதுமக்களுக்கு செய்யும் துரோகமாக கருதுகிறேன்’ என்று கூறினார்.

ராஜ்கிரணின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply