ஐந்து நாள் பயணமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளதால், அரசு மற்றும் அமைச்சரவைக்கான பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிரதமர் இல்லாதபொழுது ராஜ்நாத் சிங், அரசு மற்றும் அமைச்சரவைக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நரேந்திமோடி முன்பு ஜப்பான் சென்றிருந்தபோது இது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் இம்முறைதான் முதன்முறையாக அமைச்சரவை மற்றும் அரசு துறை நிர்வாகங்களுக்கு இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.