காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்த என்.டி.திவாரியை இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரவ்பிரதேசத்தில் என்.டி.திவாரிக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. அவரை தனிப்பட்ட முறையில் நட்பு அடிப்பையில் சந்தித்ததாக ராஜ்நாத் சிங் கூறினாலும், காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டால் உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
80 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கிய உத்தரபிரதேசம், எப்போது பிரதமர் வேட்பாளர்களை தேர்தெடுக்கும் பெருமை உடையது. இம்முறை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவதால், அவருக்கு என்.டி.திவாரி ஆதரவு கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாதாரண சந்திப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கூறப்பட்டாலும் காங்கிரஸ் இந்த சந்திப்பு காரணமாக அதிர்ந்துள்ளது என்பதுதான் உண்மை