தமிழக அரசின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்படும். ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து ராஜ்நாத்சிங்

தமிழக அரசின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்படும். ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து ராஜ்நாத்சிங்
rajnath
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளாக சிறைத்தண்ட்னை அனுபவைத்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து நேற்று மத்திய உள்துறை செயலகத்துக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அவர்கள்: மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிசுக்கு எழுதினார்.

இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் 7 பேர்களை விடுவிப்பது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. மேலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவு என்ன என்பதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பதில்கூறிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த ஆலோசனையின் போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply