ரஜினி ஒரு கோழை! தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும்: அன்புமணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து அரசியலுக்கு வருவதாக பேசிக்கொண்டிருக்கின்றார். இந்த 20 வருடங்களில் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி தனது ரசிகர்களின் சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து பேசினாலும் இப்போதும் அவர் அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக சொல்ல முடியாது.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பூச்சாண்டி குறித்து பாமக அன்புமணி கூறியதாவது: நடிகர் எனது திருமணத்திற்கு முன்பே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் எனது பேரன் திருமணத்தின் போது கூட அரசியலுக்கு வரமாட்டார்.அவர் தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும். வருவேன், வருவேன் என ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.’ என்றார்