ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: 19 இடங்களை பிடித்தது பாஜக

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: 19 இடங்களை பிடித்தது பாஜக

நேற்று ராஜ்யசபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்த தேர்தலில் பாஜக 19 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களளயும் திரினாமுல் காங்கிரஸ் 4 இடங்களையும், பிஜேடி 3 இடங்களையும் டிஆ.எஸ் 3 இடங்களையும் பிடித்துள்ளது. உபியில் நடந்த 9 ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பாஜக பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதியிருக்கும் 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.

எனவே மொத்தமுள்ள 58 தொகுதிகளில் நடந்த தேர்தலில் பாஜக 19 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களளயும் திரினாமுல் காங்கிரஸ் 4 இடங்களையும், பிஜேடி 3 இடங்களையும் டிஆ.எஸ் 3 இடங்களையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பிக்கள் இரண்டு பேர் கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply