மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் காலியான 6 மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக 4 வேட்பாளர்களையும், சி.பி.எம் கட்சி ஒரு வேட்பாளரையும், திமுக ஒரு வேட்பாளரையும் அறிவித்தது.
தேமுதிக போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்ற சூழ்நிலையில் நேற்று மாலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் வரை அக்கட்சியில் இருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனவே ஆறு இடங்களுக்கு ஆறு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால் திமுக வேட்பாளர் திருச்சி சிவா உள்பட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்.