நடிகையின் கவர்ச்சி ஆடையில் பிரதமர் மோடி படம். பெரும் சர்ச்சை

நடிகையின் கவர்ச்சி ஆடையில் பிரதமர் மோடி படம். பெரும் சர்ச்சை

rakki sounthபிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மோடி உருவம் பதித்த கவர்ச்சி உடை அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் சமீபத்தில் இந்தியர்கள் அனைவரும் இணைந்து இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாடினர். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராக்கி சாவந்த் அவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்திருந்தன.

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையான இவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் உடையணிந்து ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உள்ளாடை போன்ற படுகவர்ச்சியான உடையில் ராக்கிசாவந்த் வந்தார். ஆனால் அதுமட்டுமின்றி அந்த கவர்ச்சி உடையில் ஆங்காங்கே பிரதமர் மோடியின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. இதை பார்த்து விழா குழுவினர்களும், விழாவுக்கு வந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். சுதந்திர தின விழாவில் கண்ணியமாக உடையணியாமல், கவர்ச்சியாக வந்தது மட்டுமின்றி, பிரதமரையும் அவமதிக்கும் வகையில் உடையணிந்திருந்த நடிகைக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply