ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ளதா? முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

ramஇந்து மதத்தின் அவதார புருஷனாகவும், புனித கடவுளாகவும் விளங்கி வரும் ராமர் பிறந்த அயோத்தியில் கடந்த சில வருடங்களாக ராமஜென்ம பூமி’ பிரச்சனை ஏற்பட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஒருவர் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும், ராமர் பிறந்த இடம் தற்போதையை பாகிஸ்தானில் இருப்பதாகவும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் அப்துல் ரஹீம் குரேஷி என்பவர் தான் எழுதிய புத்தகம் ஒன்றை நேற்று டெல்லியில் வெளியிட்டார். இந்த விழாவில் மிக ஆவேசமாக பேசிய அப்துல் ரஹிம் குரேஷி, “உண்மையான ராம ஜென்ம பூமி பாகிஸ்தான் நாட்டில் தான் உள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடமேஅல்ல. பிரபல தொல்லியல் துறை ஆய்வாளரான ஜஸ்ஸூ ராம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

அவரது ஆய்வின்படி ராமர் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.  ராமன் தேரி` என்று அழைக்கப்பட்டு வந்த அந்த இடம், இந்திய பிரிவினைக்கு பின்னர் `ரஹ்மான்தேரி` என்று அழைக்கப்படுகிறது. எனவே உண்மையான ராம ஜென்ம பூமி தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவில் அமைந்துள்ளது. அயோத்தியில் நடத்தப்பட்ட 3 தொல்லியல் அகழ்வில் ராமன் பிறந்ததற்கான அடையாளங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக ராமன்தேரியில் அதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்று ‘ராமாயணம்’ உள்பட பல நூல்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ள நிலையில் அப்துல் ரஹீம் குரேஷின் சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply