வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணம் குறித்து போதிய நடவடிக்கை எடுக்காத நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநிலங்களவை எம்.பியும் பிரபல சீனியர் வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி பேசியுள்ளார்.
வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக கூறிய ராம்ஜெத்மலானி, பாஜக தலைவர்களின் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளும், ஆட்சிக்கு வந்த பின்னர் எடுக்கும் நடவடிக்கைகளில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கருப்பு பண மீட்பு விவகாரத்தில் மெத்தனமாக இருக்கும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தான் எழுதிய கடிதத்திற்கு இன்னும் அவரிடம் இருந்து பதில் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.