மோடியுடன் பிரேக்-அப். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அதிரடி

ram-jethmalaniமோடியுடன் பிரேக் – அப் ஆகிவிட்டதாகவும் அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும்  தம்மை விட்டு போய்விட்டது என்றும் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமர் ஆக ஒருசிலர் பாஜகவில் எதிர்ப்பு தெரிவித்தபோது அவருக்கு முழு ஆதரவு கொடுத்து மோடியை பிரதமர் ஆக்கியதில் பெரும்பங்கு ராம்ஜெத்மலானி அவர்களுக்கு உண்டு என்பதை பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவர். இந்நிலையில் மோடிக்கு எதிராக திடீரென ராம்ஜெத்மலானி கருத்து கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல வழக்கறிஞரும் பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பா.ஜ.க ராஜ்யசபை எம்.பியுமான ராம் ஜெத்மலானி, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக கே.வி. சவுத்ரி நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கே.வி. சவுத்ரி நியமனத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ”மோடியுடன் ஆன நட்புக்கு பிரேக் – அப் ஆகிவிட்டதாகவும் அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் தற்போது இல்லை” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply