தாவூத் இப்ராஹிம் சரண் அடையும் திட்டத்தை நிராகரித்தது யார்? ராம்ஜெத்மலானி திடுக்கிடும் தகவல்

ramjethமும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் தாவூத் இப்ராகிம் சரண் அடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு  நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரணமாக நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளி சோட்டா ஷகிலுடன் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளனர். தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும், பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தாவூத் இப்ராகிம் இருப்பதாகவும் இந்தியா பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராகிம் குறித்து பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். ”தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோர் இந்திய அதிகாரிகளிடம் சரண் அடைந்து தங்கள் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திக்க முன்வந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ் அரசு இதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டது.

சோட்டா ஷகீல் லண்டனில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னை போலீசார் துன்புறுத்த மாட்டார்கள் என உறுதி அளித்தால் சரண் அடைய தயாராக இருப்பதாக கூறினார். இந்த தகவலை மகாராஷ்டிரா அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவித்தேன். ஆனால், மகாராஷ்டிர அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால், சோட்டா ஷகீலின் நிபந்தனைக்கு என்னால் உறுதி அளிக்க முடியவில்லை”

இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.

Leave a Reply