ராம்மோகன் ராவ் வீட்டு ரெய்டில் சிக்கியது என்ன? திடுக்கிடும் தகவல்கள்
தமிழக வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் விடியவிடிய நடத்திய சோதனையில் ரூ. 48 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள், 7 கிலோ தங்கம் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.,
சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன் ராவ் வீடடு, அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்றது,. மேலும் ராம் மோகன் ராவ் மகனுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொழில் அடிப்படையில் தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மணல் குவாரி தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ரெட்டி ஆகியோருடன் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. வீடு மட்டுமின்றி தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவின் அலுவலக அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும் தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் சித்தூரில் உள்ள அவரது சம்பந்தி பத்ரிநாராயணா வீட்டில் இருந்து ரூ.100 கோடிக்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயவாடாவில் உள்ள ராம மோகன ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் வருமான வரித்துறையினர் 40 முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது