ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ராம்நாத் கோவிந்த் முன்னிலை
கடந்த திங்களன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த் அவர்களும் எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் அவர்களும் போட்டியிட்டனர். இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் கிடைத்த செய்தியின்படி தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமார் மிகவும் பின் தங்கியுள்ளதால் ராம்நாத் கோவிந்த் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் ராம்நாத் கோவிந்த் 60,683 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். எதிர்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட மீரா குமார் 22,941 வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு யார் அடுத்த ஜனாதிபதி யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்நாத் தொடர்ந்து முன்னிலை வகிப்பதையடுத்து, அவரது தேராபூர் கிராம மக்கள் யாகம் நடத்தி கடவுளுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.