14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக இன்று ராம் நாத் கோவிந்த் பதவியேற்றார் இவருக்கு தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று மதியம் 12.15 மணிக்கு ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்புக்கு முன்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்திற்கு சென்று ராம்நாத் அஞ்சலி செலுதினார். இதையடுத்து முக்கிய ஆவணங்கள் குறித்து விடை பெறும் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி மற்றும் ராம் நாத் கோவிந்த் இருவரும் கொள்கை ரீதியிலான விஷயங்களை பரிமாறிக் கொண்டனர்.

14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற விழவில் பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், தலைமை நீதிபதி, பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த ராம் நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த மீரா குமார் 3,67,314 வாக்குகளும் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply