சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66
கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த இராம.நாராயணனுக்கு திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்த வேளையில், நேற்று மாலை அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ், தெலுங்கு,கன்னடம்,போஜ்புரி போன்ற பல மொழிகளில் அவர் இதுவரை 126 திரைப்படங்கள் இயக்கி, கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார்.
இன்று மாலை சென்னை வரும் இராம.நாராயணனின் உடல் நாளை அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இராம.நாராயணன் மறைவிற்கு தமிழ்த்திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.