மனிதர்களை பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர்….

12141709_972837732777747_9080305014412197561_nகோவில் புசாரி ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் , “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை” என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்: “இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது”


அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. ” உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே” என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்: ” எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்து விடுவார்கள்

Leave a Reply