ரஜினியின் உண்மையான முகம் வெளிவந்துருக்கு: மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன்

ரஜினியின் உண்மையான முகம் வெளிவந்துருக்கு: மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன்

கடந்த இரண்டு நாட்களாக தூத்துகுடி விஷயம் குறித்தும் போராட்டம் குறித்தும் சமூக விரோதிகள் குறித்தும் ரஜினி பேசியதுதான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி. அவர் என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ளமல் அல்லது வேண்டுமென்றே திரித்து அரசியல்வாதிகளும் சமூக வலைத்தள பயனாளிகளும் கூறி வரும் நிலையில் அவர் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:

ரஜினியின் உண்மையான முகம் வெளிவந்துருக்கு. அரசியலுக்கு வருகிறவர் மனதில் பட்டதை ஏதேச்சையாக பேசக் கூடாது. முதலில் ஆன்மிக அரசியல் என்றார். அதில் தனித்துவம் இருந்தது. அதை அவர் இழந்துட்டார். மக்களுக்கு ஏற்றவாறு அவர்பேசவில்லை. அடிப்படை ஷரத்தே புரியாமல் இவர் அரசியலுக்கு வந்தால் மக்களின் நிலை என்னாவது! தூத்துக்குடி விஷயத்துல அவரா போய் விசாரிச்சு தெரிஞ்சு பேசுனாரா…யாரோ சொன்னத கேட்டு பேசுனாரா தெரியல. மக்களுக்கு என்ன தேவையோ அத தான் பேசனும் மக்களோட பிரச்சினைக்கு தீர்வு என்னங்கிறத தான் தேடணும். இப்ப பேசியிருக்குற இந்த விஷயத்துல இருந்து அவர் எப்படி மீண்டு வருவார்னு தெரியல. ஆனா மீண்டு வர்றது கஷ்டம் தான். ஸ்டெர்லைட் விஷயத்துல அவர் மக்கள் விரோத போக்க தான் கடைபிடிச்சிருக்கார்.

ரஜினியை பொருத்தவரை சில விஷயங்களை ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் கூறுகிறார். போராட்டம் பொதுமக்களால் நடத்தப்பட்டது. ஆனால் சமூக விரோதிகள் புகுந்த போது அது மாறி விட்டது, அதற்கு அப்பாவி மக்கள் பலியாகி விட்டனர். அது தவறு. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் போராடக் கூடாது, அப்படி போராடினால் சமூக விரோதிகளால் போராட்டம் இது போன்ற இழப்பை ஏற்படுத்தும் , காவலர்களை தாக்கியதால்தான் இந்தத் துப்பாக்கிச் சூடு, ஆனால் தாக்கியவர்கள் பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகள், அவர்களை தனக்கு தெரியும்

அவருடைய கருத்துகளில் ரஜினி எப்போதும் போலவே தெளிவாக இருக்கிறார். காவல்துறையினரை தாக்குவது தவறு என்று அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து கூறி வருகிறார். வார்த்தைகளை விழுங்கி பேசாமல், இயல்பாக பட்டென உடைக்கும் குணம் அவருக்கு வாய்த்திருக்கிறது, ஆனால் அது அரசியலுக்கு சரியா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஏனெனில் எந்தச் செயலுக்கும் ஆளும் கட்சியாக சரியென்பதும் எதிர்கட்சி என்றால் தவறென்பதுமே நம் மக்கள் பழக்கப்பட்ட அரசியல். இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் ரஜினி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து விட்டு அதை தாண்டி வேறு எதையோ தேடுகிறாரே என்ற வியப்பே இந்தக் குழப்பத்துக்கு காரணமாகவும் இருக்கலாம்.

உணர்வுப்பூர்வமாக அனைவருமே தூத்துக்குடி சம்பவத்தை அணுகி வரும் சூழலில் எழுந்துள்ள இந்த விமர்சனங்களே ரஜினியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்து விடுமா? அல்லது இதிலிருந்து மீண்டு வருவாரா? அதுவரை மற்ற கட்சிகளின் அரசியலுக்கு தாக்கு பிடிப்பாரா? இவற்றுக்கெல்லாம் ரஜினியின் அடுத்த அடுத்த நகர்வுகள் தான் நமக்கு விடையை தரும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply