சிறையில் செல்போன் பயன்படுத்தினாரா ‘சத்யம்’ ராமலிங்க ராஜு?

ramalinga rajuபிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பலகோடி மோசடி செய்ததாக நிரூபிக்கபட்டு ஜெயில் தண்டனை பெற்ற ராமலிங்க ராஜு தற்போது ஆந்திராவில் உள்ள செரளப்பள்ளி சென்ட்ரல் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜெயிலில் செல்போன் உபயோகித்ததாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

நேற்றிரவு ஜெயில் அதிகாரிகள் வழக்கமாக கைதிகள் அறைகளை சோதனை செய்து வந்தபோது, கைதி எண் 4148 என்ற எண்ணுடைய ராமலிங்கராஜுவின் அறையையும் சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் செல்போனும் ஒருசில சிம்கார்டுகளும் இருந்ததை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்ய ஜெயில் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராமலிங்க ராஜுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளை சப்ளை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இதுகுறித்து ராமலிங்க ராஜுவிடமும் ஜெயில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply