மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை. மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை. மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

RAIN_1_2615014gதமிழகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேல் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகள் மீளாத நிலையில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்.

மேலும், வருகின்ற புதன்கிழமை முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழையை எதிர்பார்க்க முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று காலை வரை, இலுப்பூரில் 9 செ.மீ. மழையும், புதுச்சேரியில் 7, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலத்தில் 6 செ.மீ. மழையும், திருவள்ளூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது” என்று ரமணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் மழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply