6 மாதத்தில் அயோத்தியில் ராமர் கோவில். சுப்பிரமணியன் சுவாமி
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சரித்திர சாதனை வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை ஒருபுறம் பாஜகவினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தாலும் நடுநிலையாளர்கள் கவலைப்படும் ஒரே விஷயம் அயோத்தி விவகாரம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பாஜகவின் ஒரு கொள்கையாகவே இருந்து வருகிறது. தற்போது தனி மெஜாரிட்டியுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு மாநிலத்தின் அமைதி குலைந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் சமூக நல ஆர்வலர்களிடம் உள்ளது.
இந்த சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று அளித்த பேட்டியில் இன்னும் ஆறு மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பாஜகவின் தலைமை இதுபோன்ற் சென்சிட்டிவ் விசயங்களில் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறாதவாறு அடக்கி வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.