ராமாயண காவிய சிறப்பு ரயில்: கட்டணம் ரூ.14,490 மட்டுமே

தென்மாநிலங்களில் உள்ள சுற்றுப்பயணிகள் வடமாநிலங்களில் சுற்றி பார்ப்பதற்காக ராமாயண காவிய சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், சென்னை ஆகிய ஊர்களில் உள்ளவர்களை ஏற்றி கொண்டு, வடமாநிலத்திலுள்ள ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாள் ஜனக்புரியில் சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் இராம ஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு செல்லும்

இந்த ரயிலில் சுற்றுலா செல்ல கட்டணம் ரூ.14,490 மட்டுமே. இதில் உணவு தங்கும் வசதி ஆகியவை அடங்கும்: சுற்றுலா காலம் 14 நாட்கள்

இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது