ரூ.500 கோடி பட்ஜெட்டில் ‘இராமாயணம்’. இந்திய திரையுலகில் புதிய முயற்சி

ரூ.500 கோடி பட்ஜெட்டில் ‘இராமாயணம்’. இந்திய திரையுலகில் புதிய முயற்சி

இந்தியாவில் தயாராகி வரும் பெரும்பாலான திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய எழுச்சியாக இந்தியாவிலும் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘பாகுபலி 2’ வெற்றிக்கு பின்னர் பலர் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க முன்வந்துள்ளனர்.

ஏற்கனவே ‘2.0, சங்கமித்ரா ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது ரூ.500 கோடி பட்ஜெட்டில் ‘இராமாயணம்’ திரைப்படம் உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் 3D டெக்னாலஜியில் தயாராகவுள்ள இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த், மது மேண்டேனா, நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ராமர், சீதை, ராவணன், லட்சுமண், அனுமார் கேரக்டர்களுக்கு தென்னிந்திய மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply