அன்புமணி தான் அடுத்த முதல்வர் என்பது ஜெயலலிதா ஆவியின் விருப்பம். ராமதாஸ்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது ஆவி உக்கிரமாக இருப்பதாகவும், வர்தா புயல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்துவதாகவும் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக புரளி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி தான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
இன்று சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: ”நான் ஊழல் செய்துவிட்டேன். எனது தோழியும் சரியில்லை. ஆதலால், அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆவி விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் அன்புமணி சொன்ன மாற்றம் வரத்தான் போகிறது.
தரம் இல்லாதவர்களை எல்லாம் தலைப்பு செய்தியில் போட்டு நாட்டை சீரழித்து விடாதீர்கள். பொறுப்புடன் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டும். நான் கட்சி துவங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்காகவும்தான் நான் உழைத்து வருகிறேன். எங்களை ஜாதிக் கட்சி என்ற முத்திரையை இனிமேலும் குத்தாதீர்கள். இந்த எடப்பாடி மற்றும் புன்னகை மன்னன் பன்னீர் செல்வம் ஆகியோர் அரசியலில் இருந்து ஒழியப் போகிறார்கள்” என்று அவர் கூறினார்.