பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை அடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
3 கோடியே 30 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளை ஏழைகளுக்கு வழங்கி சாதனை..
பிரசவ கால விடுப்பை உயர்த்தி வழங்கியிருக்கிறது இந்த அரசு * தொழில் தொடங்கும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன * இந்த நடைமுறையால் இதுவரை 3 கோடி இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர்
* விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் இந்த அரசு உத்தேசித்துள்ளது
வசதி படைத்தவர்கள் மானியங்களை விட்டுதருவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் மருத்துவ சேவை அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது சிறுபான்மையினருக்கு அதிகாரமளிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது
உடனடி முத்தலாக் தடை சட்ட மசோதா முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்
பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மூலம் 18 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்; முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏழைகள் பெற்று வருகின்றனர்
காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாளை அடுத்த ஆண்டு கொண்டாடும்போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும்
விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
ஏழைகள், பின்தங்கிய மக்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக தூய்மை இந்தியா திட்டம் இருக்கும்