கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் நடிகை ரம்யாகிருஷ்ணன்?
சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் மிக அபாரமாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்ற நடிகை ரம்யாகிருஷ்ணன் தமிழ் உள்பட நான்கு மொழிகளில் தயாராகவுள்ள ஒரு படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கதாநாயகான நடிக்கும் திரைப்படம் ஒன்றில் அவருக்கு அம்மாவாகவும், பயிற்சியாளராகவும் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மற்ற படங்களில் வரும் அழுதுவடியும் அம்மாவாக இல்லாமல் மகனுக்கு ஒரு தோழியாகவும், மகனின் கிரிக்கெட் ஆசைக்கு உறுதுணையோடு இருக்கும் கேரக்டராகவும் நடிக்கவுள்ளார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிரகாஷ் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் சனாயாடி ரெட்டி இந்த படத்தை இயக்கிவருகிறார்.