தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் நடித்த நடிகை ரம்யாவும், விஜய்யுடன் மதுர படத்தில் நடித்த நடிகை ரக்ஷிதாவும், கர்நாடக மாநில எம்.பி.தேர்தலில் மாண்டியா தொகுதியில் கடந்த வருடம் மோதினர். இதில் நடிகை ரம்யா வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எம்.பியாக இருக்கின்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நடிகை ரம்யா போட்டியிட விரும்புகிறார்.
இதை கேள்விப்பட்ட நடிகை ரக்ஷிதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மேலிடத்தில் மீண்டும் நடிகை ரம்யாவை எதிர்த்து போட்டியிட ஒரு வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இம்முறை வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக ரம்யாவை தோற்கடித்து அந்த தொகுதியை கைப்பற்றுவேன் என கட்சி மேலிடத்தில் உறுதி கூறியுள்ளார். கட்சி மேலிடமும் அவருக்கு சீட் கொடுக்க முன்வந்துள்ளது. எனவே தனுஷின் நாயகியும், விஜய் நாயகியும் மீண்டும் ஒருமுறை மாண்டியா தொகுதியில் மோதப்போவது உறுதியாகிவிட்டது.