பசி தாங்க முடியாத ஒன்று தான். ஆனால், பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள். பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. அதனால் தான் ரமலான் மாதத்தில் பசி பொறுத்து நோன்பு நோற்கிறோம்.””ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான், என்கிறார் நாயகம்.
பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சசயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள்.
“”ஒருவன் யாசசகத்தின் (கைநீட்டுதல்) ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான், என்றும் நாயகம் செசால்கிறார். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும்.
பசி பொறுப்பது போல தொழுகையும் மிக அவசியமான ஒன்றாகும்.
“”மனிதனுடைய அகமும் புறமும் பரிசுத்தமடைவதற்கு வணக்கங்களில் தொழுகை முதன்மையானதாகும். ஒருவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதை செசயல் மூலம் காட்டுவதற்கு தொழுகை முதல் அடையாளமாகும். இதனால் தான் இவ்வணக்கத்தை விட்டவன் நிச்சசயமாக இறைவனை நிராகரிப்பவனாக ஆகி விட்டான், என்கிறார் நாயகம்.
பசி பொறுத்து தொழுவோருக்கு இறைவனின் அருள் உண்டு.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி