அன்னை தெரசாவின் தொண்டு நிறுவன கன்னியாஸ்திரிகள், குழந்தைகளை விற்றதாக கைது!
பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை பாதிரியார்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிவந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் குழந்தைகளை பணம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்ததாக அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஞ்சி நகரில் அன்னை தெரசாவின் ‘மிஷினரி ஆப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் திருமணத்திற்கு முன் கர்ப்பமடைந்த பெண்களும் விதவைகளும் தங்கியுள்ளனர். அதேபோல் மற்றொன்றில், சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணியாற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக, குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், கன்னியாஸ்திரிகள் இருவர் பலமுறை குழந்தைகளை சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் இருவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.