ராஞ்சி டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று ராஞ்சியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 94 ரன்களுடனும், மாக்ஸ்வெல் 45 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்
இந்திய அணி தரப்பில் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்,.