அவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா?
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதியாக வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை குறிக்கும் வகையில் நேற்று மக்களவையில் குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் கொண்டு வரப்பட்டது
இந்த சட்டத் மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாக இந்த கட்சிகளின் எம்பிக்கள் பேசினார்கள். ஆனால் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பலர் திடீரென மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த சட்டத்திற்கு 80 எம்பிக்கள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்
இந்த நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இதுகுறித்து கூறியதாவது: சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த இந்தியனும் இந்நாட்டின் நண்பனாகவோ, ஜனநாயகவாதியாகவோ இருக்க முடியாது. அவன் இந்நாட்டின் விரோதி ஆவான்.
இந்நாட்டின் விரோதி என்று பா ரஞ்சித் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சட்டத் திருத்தத்தை மக்களவையில் கொண்டு வந்த அமித்ஷாவையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விக்கு பா.ரஞ்சித் பதில் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Secularism #மதச்சார்பின்மை
சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த இந்தியனும் இந்நாட்டின் நண்பனாகவோ,ஜனநாயகவாதியாகவோ இருக்க முடியாது.அவன் இந்நாட்டின் விரோதி ஆவான். #புரட்சியாளர்அம்பேத்கர்#குடியுரிமை#CitizenshipAmendmentBill2019 @Neelam_Culture— pa.ranjith (@beemji) December 10, 2019