தாய்லாந்து கடற்கரையில் ஒதுங்கிய 15அடி நீள சுறா மீன். அபூர்வ படங்கள்

   sharkபிலிப்பைன்ஸ் கடற்கரையில் நேற்று 15 அடி நீளமுள்ள மெகா சைஸ் சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த மீனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒதுங்கிய மிகப்பெரிய சுறா மீன்களில் இது 15வது சுறா மீன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு மிகப்பெரிய சுறா மீன் ஒதுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

shark 3

தாய்லாந்து நாட்டில் உள்ள கடற்கரையில் நேற்று ஒதுங்கிய பிரமாண்டமான இந்த சுறா மீனுக்கு 50 கூர்மையான பற்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 15 அடி நீளமுள்ள இந்த சுறாமீனின் வாய் மிகப்பெரிய அளவில் இருந்ததாகவும், வாய் முழுவதும் ஐஸ்கட்டிகள் நிரம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

shark 2

இதற்கு முன்னர் கரையொதுங்கிய சுறா மீன்கள் அனைத்தையும் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் சமையல் செய்து சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் இம்முறை கரையொதுங்கிய சுறா மீனை கடல்வள பாதுகாப்பு துறை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யபோவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சுறா மீனை தூக்கி சென்று கடல்வாழ் பாதுகாப்பு துறையினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சுறா மீனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

shark 1

Leave a Reply