ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Snapdeal நிறுவனத்தில் முதலீடு செய்ய ரத்தன் டாடா முடிவு.

rathan tataஇணையம் மூலம் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் செய்யும் பிரபல நிறுவனமான Snapdeal  நிறுவனத்தில் முதலீடு செய்ய ரத்தன் டாடா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ள 76 வயது ரத்தன் டாடா அவர்கள், ஒரு பெரும் தொகையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Snapdeal நிறுவனத்தில்  முதலீடு செய்ய உள்ளார். Snapdeal நிறுவனரின் உரிமையாளர் குணால் பால் அவர்களுக்கு இமெயில் மூலம் ரத்தன் டாடா அவர்கள் இதை தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பே Snapdeal நிறுவனத்தின் தலைமை அலுவலகமான டெல்லிக்கு நேரடியாக சென்ற ரத்தன் டாடா, அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் Snapdeal நிறுவனத்துடன் டாடா இணைந்தால் அதன் போட்டி நிறுவனங்களான ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

Leave a Reply