கைரேகை பதிவு இல்லை என்றால் ரேசன் பொருட்கள் உண்டா? தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெரும் அட்டைதாரர்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருள்கள் கிடைக்கும் என்பது தெரிந்ததே

ஆனால் சில நேரங்களில் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்படுவதல் கைரேகை சரியாக பதிவு செய்யப்படாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை

இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பதிவு செய்யப்படாத நேரத்தில் இயந்திரத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்து உரிய பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.