பச்சை மருதாணியை தலையில் போடலாமா?

932855c1-7b6c-4d6e-9a4f-bd3bd94a82d6_S_secvpf

பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக் கலந்தே உபயோகிக்க வேண்டும். மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வேறு என்ன செய்யலாம்?

வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும். மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும். மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கருப்பாகும்.

ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம். கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்தி பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

Leave a Reply