ரவா பராத்தா தேவையான பொருட்கள்
ரவை – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
ரவா பராத்தா செய்முறை
ரவை பெரியதாக இருந்தால் அதை மிக்ஸியில் அரைத்து நைசாக்கிக் கொள்ளவும். ரவையுடன் உப்பு, 2 டேபிள் ஆலிவ் ஆயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு மிருதுவாகும் வரை பிசையவும். பின்னர் அதனை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அதனை தோசைக்கல்லில் போட்டு மீடியம் நெருப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.