கைக்கடிகாரத்தில் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ரேமண்ட். இந்த கைக்கடிகாரத்தை கையில் கட்டியிருந்தாலே ஒரு தனி மரியாதை உண்டு. இத்தகைய புகழ்மிக்க கைக்கடிகாரத்தை உருவாக்கிய ரேமண்ட் வெய்ல்ஸ் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
1926ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பிறந்த ரேமண்ட் வெய்ல், சில ஆண்டுகள் கேமி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பின்னர் 1976ஆம் ஆண்டு சொந்தமாக நிறுவனம் ஒன்றை துவக்கினார். தனது நிறுவனத்திற்காக புதுமாடல் கைக்கடிகாரத்தை டிசைன் செய்து அதற்கு தனது பெயரையே வைத்தார். ரேமண்ட் கைக்கடிகாரம் உலக அளவில் பிரசித்தி பெற்றது.
சென்ற ஆண்டு வயது மூப்பு காரணமாக தனது நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இருப்பினும் அவர் ரேமண்ட் நிறுவனத்தில் கெளரவ தலைவராக நீடித்து வந்தார். இவர் வடிவமைத்த கடிகாரம் உலகின் 95 நாடுகளில் விற்பனையாகி வருகிறது. ரூ.56,000 முதல் ரூ.2.9 லடம் வரை ரேமண்ட் கைக்கடிகாரங்கள் விற்பனையாகி வருகிறது. சுவிட்சர்லாந்தில் நான்கு கிளைகளுடன் சுமார் 200 ஊழியர்களை கொண்டு ரேமண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.