புதிய 1000 ரூபாய் கரண்சியில் என்னென்ன மாற்றங்கள். ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்தியாவில் மிக அதிக அளவில் கள்ள நோட்டுக்களின் ஆதிக்கம் இருந்து வருவதாக அவ்வப்போது செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய பொருளாதாரத்தையே சீரழிக்கும் கள்ள நோட்டுக்களை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கரன்ஸி அச்சடிப்பதில் அவ்வப்போது அதிரடி மாறுதல்களை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது 1000 ரூபாய் நோட்டுகளில் ‘R’ என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்க முடிவு ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
1000 ரூபாய் நோட்டின் இரண்டு பக்கங்களிலும் எண்களுக்கான பகுதியில் ‘R’என்ற எழுத்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அச்சடிக்கப்படும் 1000 ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்தும், 2016 என்பது பின்பிருந்து முன்பாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
மற்றபடி, தற்போது புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அப்படியே இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பு குறிப்பிட்டுள்ளது.