ரிசர்வ் வங்கியின் வாகனம் விபத்து. சிதறி விழுந்த சில்லறைகள்

ரிசர்வ் வங்கியின் வாகனம் விபத்து. சிதறி விழுந்த சில்லறைகள்
rbi
இந்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் சில்லறை காசுகள் அடங்கிய டிரம்களுடன் சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக டிரம்களில் உள்ள சில்லறை காசுகள் சாலையில் சிதறி விழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால், வாகனத்தில் உள்ள சில்லறை காசுகள் சாலையில் சிதறி விழுந்தது.
rbi 1 rbi2
தகவல் அறிந்து உடனே வந்த மீட்புப்படையினர் சிதறிய சில்லறையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிக்கு உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வாகன டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

English Summary:RBI vehicle got accident on Hyd – Mumbai highway

Leave a Reply