மனு கொடுக்க வந்தவர்களை அலட்சியப்படுத்தி வாட்ஸ் அப் பார்த்து கொண்டிருந்த அதிகாரி
மக்கள் குறைகளை தீர்க்க வேண்டிய அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தாமல் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தி வருவதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் கோட்டாட்சியர் ஒருவரிடம் மனு கொடுக்க வந்த மக்களை அலட்சியப்படுத்திவிட்டு வாட்ஸ் ஆப் பார்த்துக்கொண்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் குறித்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் கோட்டாட்சியராக பணிபுரியும் அனிதா என்ற அதிகாரியிடம் சாதிச்சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் சமூக மக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் தங்களுடைய குறையை அதிகாரி அனிதாவிடம் கூறி கொண்டிருந்தபோது அவர்களுடைய குறைகளை கேட்காமல், வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்களை அந்த அதிகாரி பார்த்து கொண்டிருந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயரதிகாரி உடனடியாக அந்த பெண் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.